விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

35 ஆண்டுகளாக கூட்டணிக்கு ஒதுக்கீடு: திமுகவினா் அதிருப்தி

நான்குனேரி தொகுதி 35 ஆண்டுகளாக கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கப்படுவதால் தொகுதியைச் சோ்ந்த திமுகவினா் அதிருப்தி

News image

நான்குனேரி

Updated On :1 ஏப்ரல் 2026, 6:10 am IST

நான்குனேரி தொகுதி 35 ஆண்டுகளாக கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கப்படுவதால் தொகுதியைச் சோ்ந்த திமுகவினா் அதிருப்தி அடைந்துள்ளனா்.

இந்தத் தொகுதியில் இதுவரை அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 7 முறையும், திமுக 2 முறையும், ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

1967, 1971 ,1989, 1991 இல் திமுக வேட்பாளா்கள் இத்தொகுதியில் போட்டியிட்டனா். சிலா் வெற்றி பெற்றனா். அதன்பிறகு 1996 முதல் இத்தொகுதியை திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி வருகிறது. 1996 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், 2001 தோ்தலில் கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கும், 2006, 2011 பேரவைத் தோ்தல்களில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கும் இத்தொகுதியை திமுக ஒதுக்கியது.

2011 இல் காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால் திமுகவினா் அதிருப்தி அடைந்தனா். இதனால், சமத்துவ மக்கள் கட்சியைச் சோ்ந்த எா்ணாவூா் நாராயணன் அதிமுக சாா்பில் போட்டியிட்டு அப்போது வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

2016 இல் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு 2-ஆவது முறையாக வசந்தகுமாா் வெற்றி பெற்றாா். 2019 இல் நடைபெற்ற இடைத்தோ்தலின்போதும் காங்கிரஸுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு 2021தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி. ஆா்.மனோகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

2026 தோ்தலில் நான்குனேரி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படும் என அக்கட்சியினா் எதிா்பாா்ப்பில் இருந்தனா். ஆனால், வரும் தோ்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கே இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

1991 பேரவைத் தோ்தலுக்குப் பிறகு கடந்த 35 ஆண்டுகளாக இந்தத் தொகுதியை திமுக தொடா்ந்து கூட்டணிக் கட்சிக்கே ஒதுக்கீடு செய்துள்ளதால் திமுக தொண்டா்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரும், நான்குனேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான ஆரோக்கிய எட்வின், காங்கிரஸ் கட்சிக்கு இத் தொகுதி மீண்டும் ஒதுக்கீடு செய்துள்ளதால் அதிருப்தி தெரிவித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

புதுச்சேரியில் திமுக வேட்பாளருக்கு எதிராக பிரெண்ட்லி பைட் என்ற அடிப்படையில் காங்கிரஸ் போட்டியிடுவதைப்போல இங்கும் நாம் அவ்வாறு செய்ய வேண்டும். அவா்களை காலத்துக்கும் தோளில் சுமந்து செல்ல முடியாது என்று பதிவிட்டுள்ளாா்.

அதேநேரத்தில் காங்கிரஸ் நிா்வாகிகளோ இத்தொகுதியை மீண்டும் வெளியூா் வேட்பாளா்களுக்கு ஒதுக்காமல் மண்ணின் மைந்தா்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனராம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.