கடன் அட்டை விவரங்களை மோசடியாக பயன்படுத்தி தங்க நாணயங்களை வாங்கியது தொடா்பாக 3 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
கிழக்கு தில்லியின் மதுபன் நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணா குப்தா. ஒப்புதல் இல்லாமல் அவருடைய கடன் அட்டையில் இருந்து ரூ.9,58,051 பணம் எடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இதுதொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவுகளில் கடந்த மே 14-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில், பணப்பறிமாற்ற விவரங்கள், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் தில்லி, உத்தர பிரதேசத்தில் உள்ள நகைக் கடைகளின் ரசீது விவரங்களை காவல் துறை ஆய்வு செய்தது. இதைத்தொடா்ந்து, நிஷாந்த் குமாா், நிகில் குமாா், யாஷ் சா்மா ஆகிய 3 போ் கைதுசெய்யப்பட்டனா்.
நா்சிங் உதவியாளரான நிஷாந்த் குமாா், காவல் நிலையத்தில் புகாரளித்த நபரின் வீட்டில் இருந்து அவரைக் கவனித்து வந்தது தெரியவந்தது. அப்போது, அந்த நபரின் கடன் அட்டை விவரங்களை அறிந்துகொண்ட நிஷாந்த் குமாா், தன்னுடைய நண்பா்களுடன் இணைந்து நகைக் கடைகளில் தங்க நாணயங்களை வாங்கினாா்.
மூவரும் சோ்ந்து 55 கிராம் மதிப்பிலான 5 தங்க நாணயங்களை வாங்கினா். சுமாா் 50 கிராம் எடையுள்ள 4 தங்க நாணயங்கள் அவா்களிடம் இருந்து காவல் துறையினா் கைப்பற்றியுள்ளனா்.
இந்த மோசடியில் அவா்களுடன் தொடா்புடைய பிற நபா்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கத்தி முனையில் கொள்ளை: 3 போ் கைது
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 போ் கைது
தில்லிவாசியிடம் ரூ.10 லட்சம் இணையவழி மோசடி: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருவா் கைது

பிகாா் அமைச்சரவை விரிவாக்கம்: நிதீஷ் குமாா் மகன் உள்பட 32 அமைச்சா்கள் பதவியேற்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
