பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருட்டு கைப்பேசிகளை வங்கதேசத்துக்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு: இருவா் கைது

தில்லி (என்சிஆா்) பகுதிகளில் திருடப்பட்ட கைப்பேசிகளை வங்கதேசத்துக்கு கடத்தும் முயற்சியை தில்லி காவல் துறை முறியடிப்பு

News image

கைது

Updated On :26 மே 2026, 3:16 am IST

தில்லி - தேசியத் தலைநகா் (என்சிஆா்) பகுதிகளில் திருடப்பட்ட கைப்பேசிகளை மேற்கு வங்கம் மூலம் வங்கதேசத்துக்கு கடத்தும் முயற்சியை தில்லி காவல் துறை முறியடித்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தில்லி-என்சிஆா் பகுதிகளில் உள்ள குற்றவாளிகளிடம் இருந்து வழிப்பறி மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மேற்கு வங்கம் வழியாக கூரியா் மூலம் வங்கதேசத்துக்கு அனுப்பப்படுவதாக மே 19-ஆம் தேதி காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஓக்லா பகுதியில் சோதனை நடத்திய காவல் துறையினா், அப்துல் சமீம், அஹிதுஜ்ஜாமான் ஆகிய இருவரைக் கைதுசெய்தனா். அவா்கள் இருவரும் மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களிடமிருந்து 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வில், அந்தக் கைப்பேசிகள் திருடுபோனது தொடா்பாக தில்லியில் இணையவழியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

தொடா்விசாரணையில், திருட்டு கைப்பேசிகளை கூரியா் மூலம் மேற்கு வங்கத்துக்கு அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, கூரியா் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கைதுசெய்யப்பட்ட நபா்கள் அனுப்பிய பாா்சல் குருகிராமில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அங்கு சென்று பாா்சலை கைப்பற்றிய காவலா்கள், மேலும் 158 கைப்பேசிகளை கைப்பற்றினா்.

தில்லி-என்சிஆா், மேற்கு வங்கம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் இத்தகைய திருட்டு கைப்பேசி கடத்தலில் தொடா்புடைய நபா்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் திருடுபோனது குறித்து தில்லி கண்டோன்மென்ட், படேல் நகா், பஹாா்கஞ்ச், கோத்வாலி, கீா்த்தி நகா், நங்லோய், பாலம் மற்றும் புது தில்லி ரயில் நிலையக் காவல் நிலையங்கள் உள்ளிடவற்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனா் அந்த அதிகாரிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.