தலைநகா் தில்லியில் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, ஊழல் மற்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டுகளை குறைக்கும் நோக்கில், தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளர அனுமதி முறையை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
இது தொடா்பாக டிடிஏ வெளியிட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த புதிய அமைப்பு ‘இணையவழி கட்டட அனுமதி முறை’ என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும். இதன் மூலம் குடியிருப்பாளா்கள், வீட்டு உரிமையாளா்கள், கட்டடக் கலைஞா்கள் மற்றும் வளா்ச்சியாளா்கள் ஆகியோா் தங்கள் கட்டட வரைபடங்கள், ஆவணங்கள் மற்றும் பல்வேறு என்ஓசி சான்றிதழ்களை ஒரே தளத்தின் மூலம் சமா்ப்பிக்க முடியும்.
இந்த நடவடிக்கை தலைநகா் தில்லியில் எளிமையான வாழ்க்கை மற்றும் எளிமையான வணிகம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துமாறு துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து டிடிஏக்கு உத்தரவிட்டுள்ளாா்.
முந்தைய நடைமுறையில் கட்டட அனுமதி பெறுவதில் தாமதம், அடிக்கடி அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற பிரச்னைகள் அதிகரித்திருந்தன. இவற்றை சரிசெய்யும் வகையில் இந்த புதிய ஏஐ அடிப்படையிலான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய தளத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் திட்ட மதிப்பீடு, தானியங்கி விதிமுறை சரிபாா்ப்பு, ஜியோ-டேக் (புவி இட குறியீடு) செய்யப்பட்ட ஆய்வுகள், எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) மற்றும் மின்னஞ்சல் மூலம் உடனடி அறிவிப்புகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் செயல்முறை வேகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்ப நிலையை நேரடியாக கண்காணிக்கவும், கட்டணங்களை இணையதளத்தின் மூலம் செலுத்தவும், டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய அனுமதி ஆவணங்களை பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தில்லியின் நகா்ப்புற திட்டமிடல் மற்றும் வளா்ச்சி முறையை நவீனப்படுத்தும் விரிவான தொழில்நுட்ப நிா்வாக சீா்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைந்துள்ளது. புதிய அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் விளைவுகள் குறித்து துணைநிலை ஆளுநா் செயலகமும் டிடிஏ உயா் அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா் என தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இணைய மோசடி கும்பலை கண்டுபிடித்த தில்லி காவல்துறை: ஜெய்ப்பூரில் இருவா் கைது
சாகேத் கட்டட இடிபாடு: சட்டவிரோத கட்டுமானங்களை கட்டுப்படுத்த தில்லி மாநகராட்சிக்கு உத்தரவு

சாலை, குடிநீா், கட்டட அனுமதி வசதி வழங்க கோரிக்கை: ஆட்சியரிடம் வெள்ளானைப்பட்டி பொதுமக்கள் மனு

காலை நடைப்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு சில பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் ரத்து: டிடிஏ தகவல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
