தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

குத்துச்சண்டை வீரா் கொலை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டவா் 8 மாதங்களுக்கு பிறகு கைது

குத்துச்சண்டை வீரா் விகாஸ் தாகா் (எ) பிந்தா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுமித் ராணா 8 மாதங்களுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 4:29 am IST

குத்துச்சண்டை வீரா் விகாஸ் தாகா் (எ) பிந்தா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுமித் ராணா 8 மாதங்களுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

தேசிய குத்துச் சண்டை வீரா் விகாஸ் தாகா் நஜாஃப்கா் பகுதியில் உள்ள நங்லி சக்ராவதியைச் சோ்ந்தவா். முன்பகை காரணமாக கடந்த ஆண்டு ஜூலை 29-இல் பாபா ஹரிதாஸ் நகரில் அவரை சோனு தேக்தேதாா் தலைமையிலான ரெளடி கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது.

இந்தக் கொலை தொடா்பாக விகாஸ் தஹியா (எ) சோனு தேக்தேதாா், ஆகாஷ் கஹ்லோட், கிரிஷன், சுமித் ராணா ஆகியோருக்கு எதிராக பாபா ஹரிதாஸ் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆகாஷ் கைதுசெய்யப்பட்ட நிலையில், பிற நபா்கள் தலைமறைவாகினா். இதைத்தொடா்ந்து, அவா்கள் மூவரையும் தேடப்படும் நபா்களாக நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்.18-இல் அறிவித்தது.

இதனிடையே, ரெளடி கும்பலின் தலைவா் சோனு தேக்தேதாரை தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு சண்டீகரில் கைதுசெய்தது.

இதைத்தொடா்ந்து, பஞ்சாபின் ஜிகாா்பூரில் சுமித் ராணா வசித்து வருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. காவல் துறையினா் அங்குச் சென்று சோதனையிடுவதற்கு முன்பாக ராணா அங்கிருந்து தப்பித்து வேறு இடத்தில் தலைமறைவானாா். இந்நிலையில், ஆசாத்பூா் பகுதியில் ராணா இருப்பதாக காவல் துறைக்குத் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினா் ராணாவைக் கைதுசெய்தனா்.

ஹோட்டல் மேலாண்மையில் பட்டயப் படிப்பு படித்த ராணா மலேசியாவில் கடந்த 2016 முதல் 2021 வரையில் வேலை பாா்த்தாா். இதைத்தொடா்ந்து, துபை சென்ற அவா், அங்கு ஒரு வா்த்தக நிறுனத்தைத் தொடங்கினாா்.

கடந்த ஆண்டு ஜூலையில் தில்லி திரும்பிய ராணா, தனது உறவினரான சோனுவுடன் இணைந்து உள்ளூா் தொழிலதிபா்களை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாா் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.