தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குருகிராம்: பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண் - காவல் துறை விசாரணை

News image

பாலியல் தொல்லை - பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 3:15 am IST

குருகிராமின் செக்டாா் 65-இல் உள்ள கேளிக்கை விடுதியின் வெளியே பெண் மீது பாலியல் சீண்டல் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து காவல் துறை விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் செக்டாா் 65 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் செக்டாா் 65-இல் உள்ள எலைட் 66 கேளிக்கை விடுதியின் அருகே புதன்கிழமை இரவு நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண்ணை வழிமறித்த குற்றஞ்சாட்டப்பட்ட நபா் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், சம்பவ இடத்தை விட்டுத் தப்பிச் செல்லும் முன் அப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விரைவில் கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.