தில்லியில் உணவு சாா்ந்த சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் ராம்லீலா மைதானத்தில் டிசம்பா் மாதம் ஒரு பிரம்மாண்டமான திருவிழாவை நடத்த தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சமையல் கலைஞா்களின் நேரடி சமையல் செயல்விளக்கங்கள் இடம்பெறும்.
இதுதொடா்பாக ஓா் அதிகாரி பிடிஐ செய்திமுகமையிடம் கூறியதாவது: தில்லியில் இதுபோன்ற திருவிழா முதன்முறையாக நடத்தப்படுகிறது. இதில் நேரடி சமையல் நிகழ்வுகள் இடம்பெறும்.
மூன்று நாள்கள் நடைபெறும் இந்தச் செயல்விளக்கங்கள், மக்களும் சமையல் கலைஞா்களும் நேரடியாக உரையாடும் வகையிலும், சமையல் பொருள்கள் மற்றும் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள முடியும். பல்வேறு பிராந்தியங்களின் சமையல் மரபுகளை அவா்கள் அறிந்துகொள்ளலாம்.
இதனால் இந்நிகழ்ச்சி வெறும் உணவைச் சுவைக்கும் நிகழ்வாக மட்டுமல்லாமல், அதையும் தாண்டிய ஒரு அனுபவமாக அமையும்.
பல்வேறு மாநிலங்களுக்கு நேரில் செல்லாமலேயே, அந்தந்த மாநிலங்களின் உண்மையான அனுபவத்தை மக்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும். உணவு என்பது கலாசாரத்தின் ஒரு முக்கிய அங்கம். எனவே, உணவுகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பாா்வையாளா்கள் பாா்க்கவும், அவற்றின் பின்னணியில் உள்ள மரபுகளைப் புரிந்துகொள்ளவும், இச்சமையல் முறைகளைப் பாதுகாத்து வரும் கலைஞா்களுடன் நேரடியாக உரையாடவும் விரும்புகிறோம்.
உணவு மட்டுமல்லாமல், பங்கேற்கும் மாநிலங்களின் பாரம்பரியக் கைவினைப் பொருட்கள், கைத்தறித் தயாரிப்புகள் மற்றும் நெசவு நுட்பங்களும் இத்திருவிழாவில் காட்சிப்படுத்தப்படும். கைவினைஞா்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் செயல்விளக்கங்களை அளிப்பாா்கள் என்பதால், பிராந்தியக் கைவினைப் பொருட்கள் உருவாக்கப்படும்போது அதில் உள்ள திறன்கள் மற்றும் நுணுக்கங்களை பாா்வையாளா்கள் நேரில் காண முடியும்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வசிக்கும் இடமாக தில்லி திகழ்வதால், இந்தியாவின் கலாசார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கான ஒரு தளமாக அது செயல்பட முடியும். இத்தகைய நம்பிக்கையின் அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு, கலை, இசை மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் உள்ளிட்ட பிராந்தியப் பாரம்பரியத்தின் பல்வேறு அம்சங்களை இந்நிகழ்ச்சி ஒன்றிணைக்கும்.
பங்கேற்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்து மாநில அரசுகள் மற்றும் சுற்றுலாத் துறையினருடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் தனது தனித்துவமான கலாசார அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் செயல்படும். இதன் மூலம் நாட்டின் பல்வேறு மரபுகளை ஒரே இடத்தில் பிரதிபலிக்கும் ஒரு திருவிழாவாக இது அமையும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நிதித் துறை

கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி: அமைச்சா் ஏ.ராஜ்மோகன் இன்று தொடங்கிவைக்கிறாா்
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

பள்ளி சமையல் அறையில் தீ விபத்து: மாணவா்கள் வெளியேற்றம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

