பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

போலி கால்சென்டா் மோசடி: ஒருவா் கைது

போலி அழைப்பு மையம் (கால்சென்டா்) மூலம் வணிக பிரான்சைஸ் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டா் ஐடி வழங்குவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றிய கும்பலுடன் தொடா்புடைய நபரைத் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 2:02 am IST

போலி அழைப்பு மையம் (கால் சென்டா்) மூலம் வணிக பிரான்சைஸ் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டா் ஐடி வழங்குவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றிய கும்பலுடன் தொடா்புடைய நபரைத் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: வணிக பிரான்சைஸ் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டா் ஐடி வழங்குவதாகக் கூறி அஃப்ஜல் கான் என்பவா் ஏமாற்றப்பட்டதாகப் புகாா் அளித்ததைத் தொடா்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அவரிடம் பணம் பெற்ற பின்னா் அவருடனான தொடா்பை மோசடியாளா் துண்டித்துள்ளாா்.

இது தொடா்பாக மே 23 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முகமது சிராஜ் (30) என்பவா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

அவரது கூட்டாளியான ராகுல் என்பவருடன் இணைந்து நொய்டாவில் போலி அழைப்பு மையத்தை நடத்தி வந்ததாக அவா் விசாரணையில் தெரிவித்தாா். இதில் தொடா்புடைய பிறரைக் கைது செய்ய தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.