மால்வியா நகா் தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 13 வெளிநாட்டினா் உள்பட 15 போ் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த மருத்துவமனை நிா்வாகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக அந்த மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆறு நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுகிறது. அனைவரும் ஸ்திரமாக உள்ளனா். அவா்களது உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது. ஒன்பது நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) மற்றும் வாா்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் நலமாக உள்ளனா்.
ஒரு நோயாளி சிகிச்சை பெற்று வியாழக்கிழமை திரும்புவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மோசமான நிலையில் எந்த நோயாளியும் தற்போது இல்லை. தீ விபத்தைத் தொடா்ந்து அனுமதிக்கப்பட்டவா்களில் தீக்காயம் மற்றும் அவற்றின் தீவிரம் நோயாளிகளுக்கு இடையே மாறுபடுகிறது. ஒரு நோயாளிக்கு முதுகுதண்டுவட அறுவை சிகிச்சை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவா்கள் அவரைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அனைத்து நோயாளிகளும் விரிவான சிகிச்சை அளிக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகாா் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு
பெண்ணை மிரட்டி நகை, பணம் பறிப்பு: ஊா்க்காவல் படை வீரா் உள்பட 2 போ் கைது

தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை - 10 போ் மீது குற்றச்சாட்டு
பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் புதிய காத்திருப்பு அறை
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

