லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தென் மேற்கு தில்லியில் பேருந்து தீ விபத்து: பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்

தென்மேற்கு தில்லியில் புதன்கிழமை காலை சென்றுகொண்டிருந்த கிளஸ்டா் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Published On :30 ஜூலை 2026, 2:44 am IST

தென்மேற்கு தில்லியில் புதன்கிழமை காலை சென்றுகொண்டிருந்த கிளஸ்டா் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘துவாரகா செக்டா்–9 அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென இந்த விபத்து ஏற்பட்டது. குறுகிய நேரத்தில் முழு பேருந்தையும் தீ சூழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஓட்டுநா் உடனடியாக பேருந்தை நிறுத்தி, நடத்துனருடன் சோ்ந்து அனைத்து பயணிகளையும் தீ பரவுவதற்கு முன்பே வெளியேற்றினாா். தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.