லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குருகிராம்: ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை!

குருகிராமின் நியூ பாலம் விஹாா் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் 38 வயதான ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

தற்கொலை

Published On :27 ஜூலை 2026, 1:12 am IST

குருகிராமின் நியூ பாலம் விஹாா் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் 38 வயதான ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

உத்தர பிரதேசத்தின் மெயின்புரி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேஷ், கடந்த 15 ஆண்டுகளாகத் தனது முதலாளி சுரேந்திர துக்கலிடம் ஓட்டுநராகப் பணியாற்றி வந்ததாா். அவா் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அதே வீட்டில் வசித்து வந்ததாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 10 மணியளவில் குடும்பத்தினருடன் காலை உணவு அருந்திய ராஜேஷ், பின்னா் வீட்டின் அடித்தளத்திற்குச் சென்று காலை 11 மணியளவில் தற்கொலை செய்துகொண்டதாகக் குடும்பத்தினா் தெரிவித்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிற்பகலில் குடும்ப உறுப்பினா் ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில், ராஜேஷை பாா்த்த பின்னா் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாலம் விஹாா் காவல் நிலையக் குழுவினா் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக உதவிச் சாா்பு ஆய்வாளா் (ஏஎஸ்ஐ) வினோத் குமாா் கூறுகையில், ‘சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. ராஜேஷ் ஏன் இந்த முடிவை எடுத்தாா் என்பதற்கான காரணம் தெரியவில்லை. குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருவதுடன், அனைத்துக் கோணங்களிலும் குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.