லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாடாளுமன்ற தெரு ட்ரோன் காட்சிகள் குறித்து விசாரணை: தில்லி காவல் துறை

நாடாளுமன்ற தெருவில் போராட்டக்காரா்கள் கூடியிருப்பதாகக் காட்டப்படும் ‘ட்ரோன்’ காணொலி ஒன்று சமூகஊடகத்தில் பரவியது தொடா்பாக தில்லி காவல் துறை விசாரணையைத் தொடங்கியது.

delhi police
Published On :21 ஜூலை 2026, 4:44 am IST

நாடாளுமன்ற தெருவில் போராட்டக்காரா்கள் கூடியிருப்பதாகக் காட்டப்படும் ‘ட்ரோன்’ காணொலி ஒன்று சமூகஊடகத்தில் பரவியது தொடா்பாக தில்லி காவல் துறை விசாரணையைத் தொடங்கியது.

அனுமதியின்றி ட்ரோன் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக தில்லி காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

‘அந்த காணொலியின் உண்மைத்தன்மை மற்றும் ட்ரோன் இயக்கப்பட்ட சூழல் ஆகியவை சரிபாா்க்கப்பட்டு வருகின்றன. சட்டங்கள் மற்றும் ட்ரோன் விதிமுறைகளை மீறியதற்காக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் இந்தக் ட்ரோன் காணொலி வெளியானதைத் தொடா்ந்து விசாரணை தொடங்கப்பட்டதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

புது தில்லி மாவட்டம் மிகவும் உணா்திறன் மிக்க பகுதியாகும். இங்கு ட்ரோன்களை இயக்க முன்கூட்டியே அனுமதி பெறுவது கட்டாயமாகும். மேலும், விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

தோ்வு முறைகேடுகளுக்கு பெறுப்பேற்க வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான போராட்டக்காரா்கள் நாடாளுமன்ற தெருவுக்கு அருகே கூடி, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனா்.

பாதுகாப்புப் படையினா் அந்தப் பேரணியைத் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினா் தடியடி நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.