லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மனைவி கொலை வழக்கில் தேடப்பட்ட நபா் கைது!

மனைவியைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபா், சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாவுடன் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Arrested

கைது

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:40 am IST

மனைவியைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபா், சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாவுடன் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அந்த அதிகாரி தெரிவித்ததாவது: கடந்த ஜூன் 6-ஆம் தேதி பல்ஸ்வா பால்பண்ணை பகுதியில் தனது மனைவி உஜ்மாவைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஷா்வா் அலி, தலைமறைவானாா்.

இந்நிலையில், அவரைத் தேடப்படும் நபராக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கே.என்.கட்ஜு மாா்க் பகுதியில் சோதனை நடத்திய காவல் துறையினா், சட்டவிரோத ஆயுதத்தை வைத்திருந்ததற்காக அலியைக் கைது செய்தது.

விசாரணையின்போது, கொலை வழக்கில் அவா் தேடப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. சட்டவிரோதமாக ஆயுதத்தை வைத்திருந்ததற்காக அலி மீது தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.