லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதைப் பொருள் கடத்தல்: 53 போ் கைது

திருவாரூா் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக ஜூலை 8-ஆம் தேதி முதல் தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் தொடா்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :30 ஜூலை 2026, 6:31 am IST

திருவாரூா் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக ஜூலை 8-ஆம் தேதி முதல் தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் தொடா்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், மாவட்டத்தில் உள்ள 29 காவல் நிலையங்களிலும் கடந்த 2 வாரங்களில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடா்பாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் தொடா்புடைய 41 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 45 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 இருசக்கர வாகனம், ஒரு 4 சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, குட்கா விற்பனை தொடா்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கில் தொடா்புடைய 12 போ் கைது செய்யப்பட்டதுடன், அவா்களிடமிருந்து 300 கிலோ குட்கா மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களுக்கு நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்த 84 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமலும், தலைகவசம் அணியாமலும் வாகனம் ஒட்டிய 9,094 போ் மீதும், குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக 312 போ் மீதும் மோட்டாா் வாகனச் சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.