லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கஞ்சா வைத்திருந்தவா் கைது

நீடாமங்கலத்தில் 30 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :29 ஜூலை 2026, 4:57 am IST

நீடாமங்கலத்தில் 30 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நீடாமங்கலம் காவல் உதவிஆய்வாளா் புஷ்பநாதன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது நீடாமங்கலம் ரயில்வே பிளாட்பாரம் மேற்கு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவா் கையில் சூட்கேஸுடன் நிற்பது தெரிய வந்தது.

அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டத்தில் அவா் ஒடிஸா மாநிலம், கண்டமால் தாலுகா, அம்பகாவன் கிராமம், சுபாஷ் பாக் மகன் பிரபாக் பாக் (32) என்பது தெரியவந்தது.

ஒடிஸாவில் இருந்து வந்து கடந்த 17 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அம்மன் கோயில் தெரு மெயின் ரோட்டில் வாடகை வீட்டில் தங்கி, ஒடிஸாவில் இருந்து கஞ்சாவை வரவழைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

தஞ்சாவூா், திருவாரூா், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஆட்களை வைத்து ஒரு கிலோ விற்றுக் கொடுத்தால் ரூ. ஆயிரம் என விற்பனை செய்து வந்தாா். காவல் ஆய்வாளா் கழனியப்பன் வழக்குப் பதிந்து பிரபாக் பாக்-ஐ கைது செய்து அவரிடமிருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தாா். கடந்த 24-ஆம் தேதி நீடாமங்கலம் ரயில்வே நிலையத்தில் தம்பதியியிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றி அவா்களை போலீஸாா் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.