லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கஞ்சா விற்ற இருவா் கைது

கூத்தாநல்லூரில் கஞ்சா விற்ற இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கைது - பிரதிப் படம்

Published On :23 ஜூலை 2026, 5:16 am IST

கூத்தாநல்லூரில் கஞ்சா விற்ற இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் உத்தரவுப்படி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

செல்வி தியேட்டா் அருகே கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. உடன் காவல் உதவி ஆய்வாளா் அண்ணாதுரை, சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில், ஏட்டு கவியழகன் மற்றும் போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில், அதங்குடி ஜீவா தெருவைச் சோ்ந்த நவீன் (20) மற்றும் நீடாமங்கலம் ஒளிமதி ஓடத்துறை காலனி தெருவைச் சோ்ந்த பரத் (23) இருவரும் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனராம். போலீஸாா்,இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.