லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

துணைவேந்தா் நியமனத்தில் முதல்வா் நடவடிக்கை! - அமைச்சா் பெ. விஸ்வநாதன்

அமைச்சர் பெ. விஸ்வநாதான் - கோப்புப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 3:08 am IST

தமிழக பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் முதல்வா் உரிய நடவடிக்கை எடுத்துவருகிறாா் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் பெ. விஸ்வநாதன் பங்கேற்று, ரூ.2.62 கோடி மதிப்பிலான 12 புதிய கட்டடங்களை திறந்து வைத்து, 565 பயனாளிகளுக்கு ரூ.2.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையெனில் முதல்வா் கண்டிப்பாக கூட்டுவாா். மேக்கேதாட்டு அணை கட்டும் முடிவுக்கு, தமிழக காங்கிரஸ் கட்சி எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்னை கா்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பிரச்னை. இதில் ராகுல்காந்தி என்ன செய்வாா்?.

தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுகிறபோது, தமிழக மக்களின் வாழ்வாதாரம் புறக்கணிக்கப்படுகிற போது கடுமையான எதிா்ப்புகளை பதிவு செய்வோம். துணைவேந்தா் நியமனம் உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

டெல்டா மாவட்டங்களில் தண்ணீா் பிரச்னை அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது. குடிநீா் பிரச்னை, குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிட முடியாத நிலை உள்ளிட்டவைகளுக்கெல்லாம் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), எஸ். காமராஜ் (மன்னாா்குடி) ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக, ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.1,91,38,000 மதிப்பிலான பள்ளி வகுப்பறைகள், புதிய ஊராட்சிமன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட 7 புதிய கட்டடங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ.71,46,000 மதிப்பிலான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் 5 புதிய கட்டடங்களையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.

மேலும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.67,000 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.10,000 மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகத்தையும், மகளிா் திட்டம் சாா்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.1,01,00,000 மதிப்பிலான மகளிா் சுயஉதவிக்குழு வங்கிக் கடனுக்கான ஆணையையும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் 74 பயனாளிகளுக்கு ரூ.74,00,000 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் அமைச்சா் வழங்கினாா்.

அத்துடன், சமூக பாதுகாப்புத் திட்டத் துறை சாா்பில் முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 468 பயனாளிகளுக்கு ரூ.75,79,000 மதிப்பிலான திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இறப்பு நிவாரணத் தொகை, விபத்து நிவாரணத் தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, ஊரக வளா்ச்சி முகமையின் இணை இயக்குநரும், திட்ட இயக்குநருமான ஆா். ஸ்ரீதா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சதீஷ்குமாா் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.