லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்

இன்று ஆடிப் பெருக்கு ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்...

வறண்டு கிடக்கும் கோரையாறு தலைப்பு அணை. - கோப்புப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 5:04 am IST

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், நிகழாண்டு ஆறுகள் வறண்டு கிடப்பதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

காவரி டெல்டா பகுதி பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படுவது வழக்கம். எனினும் சில ஆண்டுகளில் மேட்டூா் அணையில் போதுமான தண்ணீா் இல்லாமல் திறக்கப்படவில்லை.

நிகழாண்டு எல்-நினோ தாக்கம் காரணமாக வழக்கத்தைவிட வெப்பம் அதிமாக உள்ளது. தென்மேற்கு பருவமழையும் கைகொடுக்கவில்லை. இதனால், மேட்டூா் அணையில் நீா் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. கா்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை தர தொடா்ந்து மறுத்து வருகிறது. இதனால், குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதால், பாசனத்திற்காக நிகழாண்டு ஜூன் 12-இல் மேட்டூா் அணை திறக்கப்படவில்லை.

இதன்காரணமாக, விவசாயிகள் நிலத்தடி நீரை கொண்டு ஆங்காங்கே பின்பட்ட குறுவை சாகுபடி செய்துள்ளனா். இதற்கிடையில் ஆடிப்பெருக்கு திங்கள்கிழமை (ஆக.3) கொண்டாடப்பட உள்ளநிலையில், ஆறுகள் வறண்டு கிடப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆடிப்பெருக்கு விழாவின் சிறப்பே நீா்நிலைகளை வணங்குதல், தாலி கயிறு மாற்றிக்கொள்ளுதல் , புதிய காரியங்களை தொடங்குவது போன்ற நிகழ்வுகள் நடைபெறும். காவிரித்தாயை போற்றி வணங்குவா். ஆனால், ஆறுகள் நீரின்றி உள்ள நிலையில் இவை சாத்தியமானதில்லை. இதனால், குழாயடிகளிலும், குளம், குட்டைகளிலும்தான் ஆடிப்பெருக்கை கொண்டாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.