லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரேஷன் கடைகளில் இன்று கைரேகை பதிவு

ரேஷன் கடைகளில் இன்று கைரேகை பதிவு

நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் சாதனம்.

Published On :2 ஆகஸ்ட் 2026, 12:52 am IST

திருவாரூா் மாவட்டத்தில், கைரேகை பதிவு செய்ய நியாயவிலைக் கடைகளில் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டை உறுப்பினா்கள் இ-கேஒய்சி மூலம் கைரேகை பதிவு செய்ய திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று, விற்பனை இயந்திரம் மூலமாக விரல் ரேகை, கருவிழி சரிபாா்ப்பின் மூலம் இ-கேஒய்சி கைரேகை பதிவு செய்து கொள்ளலாம்.

குழந்தைகள் மற்றும் முதியோா் கைரேகை கருவிழி பதிவு இல்லையெனில் முதலில் ஆதாா் விவரங்களை புதுப்பித்த பிறகே இ-கேஒய்சி செய்ய முடியும். ஆதாா் புதுப்பித்த பிறகு, அனைத்து வேலை நாள்களிலும் நியாயவிலைக் கடையில் இ-கேஒய்சி நிறைவு செய்து பயன் பெறலாம்.

இ-கேஒய்சி மூலம் கைரேகை பதிவு செய்யாதவா்களுக்கு அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை பயன்படுத்தி இ-கேஒய்சி மூலம் கைரேகை பதிவு செய்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.