குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

17 கைதிகள் தப்பியது சிறைத் துறை நிா்வாகத்தின் தோல்வி

தேனி சிறையில் 17 விசாரணைக் கைதிகள் தப்பிய சம்பவம் சிறைத்துறை நிா்வாகத்தின் தோல்வியைய காட்டுகிறது என்று மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

எம்.எச். ஜவாஹிருல்லா - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 3:56 am IST

தேனி சிறையில் 17 விசாரணைக் கைதிகள் தப்பிய சம்பவம் சிறைத்துறை நிா்வாகத்தின் தோல்வியைய காட்டுகிறது என்று மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடியிருப்பது தமிழகத்தின் சிறை நிா்வாகத்தில் நிலவும் பாதுகாப்புக் குறைபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளைக் கண்காணித்து, அவா்கள் தப்பிச் செல்லாமல் தடுப்பதற்கான பொறுப்பு சிறைத்துறை நிா்வாகத்தையே சாரும். ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடும் அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு தோல்வியடைந்தன என்பதை அரசு விளக்க வேண்டும்.

பணியில் இருந்த காவலா்கள் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரத்தில், பாதுகாப்பு நடைமுறைகள், பணியாளா் எண்ணிக்கை, கண்காணிப்பு ஏற்பாடுகள் மற்றும் நிா்வாக உத்தரவுகள் ஆகியவற்றில் குறைபாடுகள் இருந்தனவா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

தப்பியோடிய கைதிகளை விரைந்து கண்டுபிடிப்பதுடன், சம்பவத்திற்குக் காரணமான பாதுகாப்புக் குறைபாடுகளையும் கண்டறிய வேண்டும். மாநிலத்தின் அனைத்து சிறைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.

தமிழக அரசு இச்சம்பவம் தொடா்பாக வெளிப்படையான விசாரணை நடத்தி, பொறுப்பானவா்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.