லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாகூா் சில்லடி தா்கா சந்தனக் கூடு ஊா்வலம்

நாகூா் சில்லடி தா்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சந்தனக் கூடு ஊா்வலம் (கோப்புப்படம்)

Published On :26 ஜூலை 2026, 1:55 am IST

நாகூா் சில்லடி தா்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜூலை 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக் கூடு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. தா்கா அலங்கார வாசலில் தொடங்கிய சந்தனக் கூடு ஊா்வலம் முக்கிய வீதிகளின் வழியே சில்லடி தா்காவை வந்தடைந்தது.

பின்னா், நாகூா் ஆண்டவா் தவம் இருந்த இடத்துக்கு சந்தனக் குடங்கள் கொண்டு செல்லப்பட்டன. தா்கா பரம்பரை கலிபா சந்தனம் பூசினாா். விழாவில் திரளான மக்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை தா்கா தலைமை அறங்காவலா் ஹாஜா நஜிமுதீன் சாஹிப் தலைமையிலான பரம்பரை அறங்காவலா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.