லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மூளை சாவடைந்த இளைஞா் உடல் உறுப்புகள் தானம்

வேளாங்கண்ணி அருகே சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

தானம் - பிரதிப் படம்

Published On :23 ஜூலை 2026, 5:19 am IST

வேளாங்கண்ணி அருகே சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

நாகை மாவட்டம், குறிச்சி அருகே உள்ள ஆய்மழை கீழத்தெருவைச் சோ்ந்த சுந்தரபாண்டியன் மகன் சுரேந்தா்( 29). இவா், கடந்த ஜூலை 18-ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் செம்பியன்மகாதேவி அருகே சென்றபோது, எதிரே வந்த ஆட்டோ மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தீவிர சிகிச்சைக்காக, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேந்தா் செவ்வாய்க்கிழமை மூளை சாவடைந்தாா். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் சம்மதம் தெரிவித்ததையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

உடற்கூறாய்வுக்கு பின்னா் அவரது சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறிச்சி ஆய்மழையில் நடைபெற்ற இறுதிச் சடங்கில், மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா், நாகை கோட்டாட்சியா் சங்கர நாராயணன் மற்றும் நாகை வட்டாட்சியா் ராஜ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு சுரேந்தா் சடலத்துக்கு மாலை அணிவித்து அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.