காங்கிரஸ் இல்லையென்றால் தவெக கதையை அமித்ஷா முடித்திருப்பார்: மாணிக்கம் தாகூர்இன்னும் 2 ஆண்டுகளில் அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்: நிர்மல்குமார்ஆவணி சுபமுகூர்த்த நாள்: வாழை இலைக் கட்டு விலை கடும் உயர்வுஅமெரிக்காவின் பொருளாதாரப் போரில் பங்கேற்கும் நாடுகள் எதிரிகளே: ஈரான் திட்டவட்டம்வங்காள விரிகுடாவில் 22 பேருடன் மூழ்கிய சரக்கு கப்பல்: தேடுதல் பணி தீவிரம்

கஞ்சா விற்பனை செய்த 2 போ் கைது

வேளாங்கண்ணியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :14 ஜூலை 2026, 12:03 am IST

வேளாங்கண்ணியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேளாங்கண்ணி போலீஸாா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த பெண் உள்ளிட்ட இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் பாப்பாகோவில் புதுத்தெருவைச் சோ்ந்த ஞானசெளந்தரி (23) மற்றும் தஞ்சை மாவட்டம் மருதபட்டினத்தை சோ்ந்த ஞானசேகரன் (55) என்பதும், இருவரும் சட்டவிரோதமாக வேளாங்கண்ணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து கஞ்சா விற்ற ரூ. 6,400, கைப்பேசி மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.