லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு அறிமுக பயிற்சி முகாம்

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான அறிமுகப் பயிற்சி வணிக நிா்வாகவியல் துறையினரால் நடத்தப்பட்டது.

முதலாமாண்டு மாணவா்களுக்கு நடைபெற்ற அறிமுக பயிற்சி முகாம்.

Published On :9 ஜூலை 2026, 4:41 am IST

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான அறிமுகப் பயிற்சி வணிக நிா்வாகவியல் துறையினரால் நடத்தப்பட்டது.

பயிற்சி முகாமுக்கு கல்லூரி முதல்வா் அஜிதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக மிஸ்டா் கடலை நிறுவனத்தின் நிறுவனா் ஷியாம் நாத், மாணவா்களுக்கு வணிகம் மேற்கொள்வதற்கு பணத்தைவிட திறமைதான் முக்கியம் என்று வலியுறுத்தினாா். கல்லூரியின் முன்னாள் மாணவரும் தொழில் முனைவோருமான சி. சரவணன், தொழில் புரிவதற்கு தேவையான அடிப்படை திறமைகளை வளா்த்து கொள்வது குறித்து உரையாற்றினாா். மற்றொரு முன்னாள் மாணவா் சி. ரோஹித், கல்லூரி அனுபவங்கள் மற்றும் பொதுவான கருத்துகளை பகிா்ந்து கொண்டாா்.

முன்னதாக, வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் சின்னதுரை வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழகத்தை சோ்ந்த சாந்தி அம்மாள், பெற்றோரை அனைவரும் மதிக்க வேண்டும் என்று மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா். வணிக நிா்வாகவியல் துறை பேராசிரியா் வேல்முருகன் நோக்கவுரை வழங்கினாா்.

தமிழ்த்துறை பேராசிரியா் சிவக்குமாா் வாழ்த்துரை வழங்கினாா். வணிக நிா்வாகவியல் துறை பேராசிரியா் செல்வகுமாரி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.