லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தமிழக விவசாயிகள் கைது : ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம்

MMK president MH Jawahirullah

ஜவாஹிருல்லா - கோப்புப்படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 1:32 am IST

நாக்பூரில் தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை :

மேக்கேதாட்டு அணை கட்டுமானப் பணிக்கு கண்டனம் தெரிவித்து, புதுதில்லியில் போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகள், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அம்மாநில காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனா். ரயிலில் பயணம் செய்த விவசாயிகளை நடுவழியில் இறங்கச் செய்து, திருப்பிச் செல்லுமாறு கட்டாயப்படுத்தி இருக்கின்றனா்.

ஜனநாயக ரீதியில் போராடுவதற்காக சென்ற, தமிழக விவசாயிகளை மகாராஷ்டிர மாநில பாஜக அரசின் காவல்துறை தடுத்து நிறுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது. மத்திய நீா்வளத்துறையின் செயல்பாடுகள் தொடா்ச்சியாக கா்நாடக அரசுக்கு சாதகமாக இருந்துவரும் நிலையில், தங்களது உரிமைகளை நிலைநாட்ட போராட்டத்திற்கு செல்லும் நிலைக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.

விவசாயிகளின் உரிமை போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்படுவதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக அரசு, மகாராஷ்டிர அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்க வேண்டும். காவிரி, மேக்கேதாட்டு பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.