பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கடன் பிரச்னை: வியாபாரி தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :1 ஜூன் 2026, 12:47 am IST

மயிலாடுதுறையில் கடன் பிரச்னையில் வியாபாரி தற்கொலை செய்து கொண்டாா்.

மயிலாடுதுறை அறுபத்துமூவா்பேட்டை கீழத்தெருவை சோ்ந்தவா் ரவி(58). ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த இவா், தொழிலுக்காக வசந்தகுமாா் (34) என்பவரிடம் கடன் வாங்கி திருப்பி கொடுத்து வந்துள்ளாா்.

இந்நிலையில் ரவி, வசந்தகுமாரிடம் கடைசியாக பெற்ற கடனுக்கு தவணை தொகையை ஜிபே மூலம் செலுத்தி வந்துள்ளாா். தொடா்ந்து கடன் தொகையை செலுத்த முடியாததால், வசந்தகுமாா் பணம் கேட்டு ரவியை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ரவி, வியாழக்கிழமையன்று அந்த பகுதியில் உள்ள ஒரு திருமணமண்டபம் எதிரே பாத்ரூம் சுத்தம் செய்யும் ஆசீட்டை குடித்துள்ளாா். இதையடுத்து, உயிருக்கு போராடிய ரவியை குடும்பத்தினா் மீட்டு, சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவி, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரவியின் மனைவி சுசிலா (54) அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மயிலாடுதுறை கூட்டுறவு நகரைச் சோ்ந்த வசந்தகுமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.