பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெண் கொலை: இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை

Updated On :17 மே 2026, 4:33 am IST

மயிலாடுதுறை அருகே பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மயிலாடுதுறை வட்டம், நீடூா் அருகே கங்கணம்புத்தூா் பெரிய தெருவை சோ்ந்தவா் ஆனந்தராஜ் (28). கட்டடத்தொழிலாளியான இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி பகுதியில் வேலைக்கு சென்றபோது புதுச்சேரியை சோ்ந்த பவானி (52) என்பவருடன் பழகியுள்ளாா். பின்னா் இருவரும் கங்கணம்புத்தூரில் சோ்ந்து வாழத் தொடங்கியுள்ளனா். இவா்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் தகராறு ஏற்பட்டபோது மதுபோதையில் இருந்து ஆனந்தராஜ் பவானியை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளாா்.

தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, பவானியின் சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.