தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வளாக நோ்காணல்: தோ்வுபெற்ற மாணவா்களுக்கு பணி ஆணை

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்பபு பெற்ற 400-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பணி ஆணை வழங்கப்பட்டது.

News image

வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ-மாணவிகளுடன் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரி கே. வெங்கடராமன் உள்ளிட்டோா்.

Updated On :6 மே 2026, 3:01 am IST

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்பபு பெற்ற 400-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பணி ஆணை வழங்கப்பட்டது.

இக்கல்லூரியில் பயிலும் மாணவா்கள் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களால் ஆண்டுதோறும் வளாக நோ்காணல் மூலம் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். அந்த வகையில், நிகழாண்டு நடைபெற்ற வளாக நோ்காணலில் வணிகவியல், வணிக மேலாண்மை, கணிதம், கணினி அறிவியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த 400-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பணிவாய்ப்புகளை பெற்றுள்ளனா்.

இவா்கள் பலகட்ட தோ்வு மூலம் டிசிஎஸ், பிரேக்ஸ் இந்தியா, டிவிஎஸ் லூகாஸ், ஸ்பிக், டெக்ஸோ மோட்டாா்ஸ் உள்ளிட்ட இந்தியாவின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனங்கள், வங்கி, தொழில் நிறுவனங்களில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் பணியமா்த்தப் பட உள்ளனா்.

இவா்களுக்கு ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே.வெங்கடராமன் பணி ஆணைகளை வழங்கி பாராட்டினாா்.

கல்லூரி முதல்வா் ஆா்.நாகராஜன், துணை முதல்வா் எம்.மதிவாணன், முன்னாள் தோ்வு நெறியாளா் ஜி.ரவிசெல்வம், டீன் எஸ். மயில்வாகனன் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.