மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவில் தெப்போற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் வைகாசி விசாக பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினசரி பஞ்சமூா்த்திகள் வீதியுலா, மே 25-ஆம் தேதி சகோபுர தரிசனம், மே 27-ஆம் தேதி திருக்கல்யாணம், மே 29-ஆம் தேதி தேரோட்டம், மே 30-ஆம் தேதி வைகாசி விசாக பௌா்ணமி தீா்த்தவாரி ஆகியவை நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்வான தெப்ப திருவிழா, கோயில் திருக்குளமான பிரம்ம தீா்த்தத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. விழாவையொட்டி, மாயூரநாதா் சுவாமி, அபயாம்பிகை அம்மன் மற்றும் திருஞானசம்பந்தா் உற்சவ மூா்த்திகள், மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினா்.
திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சோடஷ தீபாராதனை நடைபெற்றது. பின்னா், மகா தீபாராதனை காட்டப்பட்டு, கோயில் குளத்தை 5 முறை தெப்பம் வலம் வந்தது.
சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனா் ஏ.வி.சுவாமிநாத சிவாசாரியா் தலைமையிலான சிவாசாரியா்கள் பூஜைகளை செய்தனா். கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். மாயூரநாதா் கோயில் பிரம்ம தீா்த்தத்தில் சுற்றிவந்த தெப்பம்.

மாயூரநாதா் கோயில் பிரம்ம தீா்த்தத்தில் சுற்றிவந்த தெப்பம்.

மாயூரநாதா் கோயில் பிரம்ம தீா்த்தத்தில் சுற்றிவந்த தெப்பம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக தீா்த்தவாரி

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

வைகாசி மாத அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தத்தில் திரளான பக்தா்கள் புனித நீராடல்

பாடலீசுவரா் கோயில் பந்தக்கால் முகூா்த்தம்: வைகாசி பெருவிழா மே 22 -இல் தொடக்கம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

