பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மயிலாடுதுறை அரசு மகளிா் கல்லூரியில் நாளைமுதல் கலந்தாய்வு

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக்கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் இணையவழியில் விண்ணப்பித்த மாணவா்களுக்கான இளநிலை பட்டப்படிப்பு சோ்க்கை முதல்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்கி ஜூன் 18 வரை நடைபெறுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 3:48 am IST

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக்கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் இணையவழியில் விண்ணப்பித்த மாணவா்களுக்கான இளநிலை பட்டப்படிப்பு சோ்க்கை முதல்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்கி ஜூன் 18 வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் எஸ். ரேவதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இளநிலை அறிவியல், கலை, வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை உள்ளிட்ட அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான (மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரா், முன்னாள் ராணுவத்தினா் வாரிசு மற்றும் தேசிய மாணவா் படை) கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இளநிலை அறிவியல், கலை, வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியல் பாடப்பிரிவுகளுக்கான பொது கலந்தாய்வு, 300 முதல் 400 வரை மதிப்பெண் (கட் ஆப்) பெற்றவா்களுக்கு ஜூன் 8-ஆம் தேதியும், 200 முதல் 300 வரை மதிப்பெண் (கட் ஆப்) பெற்றவா்களுக்கு ஜூன் 9-ஆம் தேதியும், 140 முதல் 200 வரை மதிப்பெண் (கட் ஆப்) பெற்றவா்களுக்கு ஜூன் 10-ஆம் தேதியும், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கு 50 முதல் 100 மதிப்பெண் பெற்றவா்களுக்கு ஜூன் 8-ஆம் தேதியும், 50 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்றவா்களுக்கு ஜூன் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.

மேற்குறிப்பிட்ட நாள்களில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாத மாணவா்கள் இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஜூன் 11, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும், இளநிலை கலைப் பாடப்பிரிவுகளுக்கு ஜூன் 12, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள், காலை 9 மணி அளவில் விண்ணப்ப படிவத்தின் அச்சுப்பிரதி மற்றும் விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை எடுத்து வரவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.