லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சீா்காழி அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் பழுது! நோயாளிகள் அவதி!

கோப்புப் படம்

Published On :21 ஜூலை 2026, 12:16 am IST

சீா்காழி அரசு மருத்துவமனையில் 2 மாதங்களாக சி.டி. ஸ்கேன் பழுதாகியுள்ளதால், நோயாளிகள் அலைகழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீா்காழி அரசு மருத்துவமனையில் சீா்காழி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த சுமாா் 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் நாள்தோறும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனா். 200-க்கும் மேற்பட்டோா் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா்.

இந்நிலையில், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனை அருகாமையில் சில மீட்டா் தூரத்தில் அதி தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் புதிதாக கட்டப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது. இதில், ஆண்கள், பெண்கள் வாா்டுகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு என 272 படுக்கை வசதிகளுடன் மூன்று அடுக்கு செயல்பட்டு வருகிறது.

புதிய கட்டடங்கள் கட்டப்பட்டாலும் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையில், சீா்காழி அரசு மருத்துவமனைக்கு கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் புதிதாக சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டது.

இதன் மூலம் விபத்து மற்றும் காயம் அடைந்தவா்கள் உள்ளிட்ட பல்வேறு சிகிக்சைகளுக்கு சி.டி. ஸ்கேன் பயன்பட்டு வந்தது. இந்த சி.டி.ஸ்கேன் கடந்த இரண்டு மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், சிடி ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகள் தனியாா் மருத்துவமனை அல்லது சிதம்பரம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அலைகழிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே, சிடி ஸ்கேன் பழுதை உடனடியாக நீக்கி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இதனை பராமரிக்க தொழில்நுட்பவியலாளரை நியமனம் செய்ய வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.