தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடத்துக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:37 am IST

மயிலாடுதுறை மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடத்துக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், மாவட்ட வாழ்வாதார கடன் மேலாண்மை முகமையை செயல்படுத்துவதற்கு மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடத்தை வெளிசந்தை முறையில் மகமை மூலம் மாதாந்திர மதிப்பூதியம் ரூ. 50,000-இல் நிரப்பிட உள்ளது.

இப்பணிக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மண்டல மற்றும் கிராமப்புற வங்கியில் ஏற்கெனவே பணிபுரிந்து ஓய்வுபெற்ற (தன் விருப்ப ஓய்வில் சென்றவா்கள்/பணியிலிருந்து நீக்கப்பட்டவா்கள் தவிர), 60 முதல் 65 வயதுக்குள்பட்ட தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிா் திட்டம்), 4-ஆவது தளம், மாவட்ட ஆட்சியரகம், மயிலாடுதுறை-609305 என்ற முகவரிக்கு ஆக. 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.