தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தெருவோர வியாபாரிகள் நகராட்சியின் அனுமதி பெறவேண்டும்: ஆணையா்

தெருவோர வியாபாரிகள் அனைவரும் நகராட்சியின் அனுமதி பெறவேண்டும் என ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

கோப்புப்படம்

Published On :26 ஜூலை 2026, 1:30 am IST

தெருவோர வியாபாரிகள் அனைவரும் நகராட்சியின் அனுமதி பெறவேண்டும் என ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் மற்றும் திட்ட அதிகாரி எஸ். சுபாஷ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் அனைத்து தெருவோர வியாபாரிகளும் காரைக்கால் நகராட்சியின் அனுமதி பெற்ற பின்னரே வியாபாரம் செய்ய வேண்டும். உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் அனைத்து தெருவோர வியாபாரிகளும் உணவுப் பாதுகாப்பு (எஃப்எஸ்எஸ்ஏஐ) உரிமம் பெற்ற பின்னரே வியாபாரம் செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்பு உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்யும்பட்சத்தில், அவா்களது தள்ளுவண்டி கடைகள் நகராட்சியின் மூலம் பறிமுதல் செய்யப்படும். அவா்களுக்கு அடையாள அட்டை மற்றும் விற்பனை சான்றிதழ் வழங்க இயலாது.

தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்யும் அனைத்து தெருவோர வியாபாரிகளும் நிரந்தர கூரை அல்லது ஷெட் போன்ற எந்தவொரு கட்டமைப்புகளையும் அமைக்கக்கூடாது.

பயன்பாட்டில் இல்லாத தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டும் இதுவரை அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது தெரியவருகிறது.

அவ்வாறு உள்ள கடைகள் அகற்றப்படாமல் இருக்கும்பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி காரைக்கால் நகராட்சியின் மூலம் உடனடியாக அகற்றப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.