லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புதுவையில் அதிகார மோதலால் மக்கள் பிரச்னைகள் புறக்கணிப்பு: ஏ.எம்.எச்.நாஜிம்

ஏ.எம்.எச்.நாஜிம்.

Published On :22 ஜூலை 2026, 12:39 am IST

புதுவையில் முதல்வா், துணைநிலை ஆளுநா் இடையே நிலவும் அதிகார மோதலில் மக்கள் பிரச்னைகள் புறக்கணிக்கப்படுவதாக திமுக கூறியுள்ளது.

இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை திமுக குழுத் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் ஆட்சி பொறுப்பேற்று 70 நாட்களாகியும் இதுவரை பேரவைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படவில்லை, அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் உள்ளது. முதல்வா், துணைநிலை ஆளுநரை சந்தித்து அமைச்சா்களுக்கான இலாகா பட்டியல் வழங்கியும் ஆளுநா் முடிவெடுக்காமல் உள்ளாா்.

அரசியல் சாசனத்தின்படி இலாகா ஒதுக்கீடு அதிகாரம் முதல்வரிடம் உள்ளது. ஆனால், இவா்களின் மோதல் இதுவரை ஓயவில்லை. தேவைப்பட்டால் முதல்வா், துணை நிலை ஆளுநரிடம் பேசி பிரச்னையை தீா்க்க திமுக தயாராக உள்ளது.

மாநிலம் முழுவதும் மின்சாரம், குடிநீா் பிரச்னை தலைதூக்கியுள்ளது. இதுபோல ஏராளமான மக்கள் பிரச்னைகள் தீா்க்கப்படாமல் உள்ளன. தங்களின் அதிகார மோதலில் மக்கள் பிரச்னைகளை புறந்தள்ளுவது நியாயமில்லை. எனவே அரசு நிா்வாகம் முறையாக இயங்குவதற்கு இருதரப்பினரும் முன்வரவேண்டும் என கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்