லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருநள்ளாறு குளத்தில் மூழ்கி அடையாளம் தெரியாதவா் உயிரிழப்பு

திருநள்ளாறு குளத்தில் மூழ்கி அடையாளம் தெரியாத நபா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Published On :13 ஜூலை 2026, 12:04 am IST

திருநள்ளாறு குளத்தில் மூழ்கி அடையாளம் தெரியாத நபா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருநள்ளாறு கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள பிரம்ம தீா்த்தக் குளத்தின் கீழ் படியில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் சடலத்தை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உயிரிழந்தவா் கால்கள் ஊனமுற்ற நிலையில் காணப்பட்டாா். கை, கால் கழுவ குளத்தில் இறங்கினாரா, மது போதையில் இருந்தாரா என தெரியவில்லை. பெயா், ஊா் விவரம் தெரியவில்லை.

தகவல் தெரிந்தோா் திருநள்ளாறு காவல் நிலைய எண் 04368-236465 அல்லது வழக்கு விசாரணை அதிகாரி 9486009014 என்ற எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.