லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புதுச்சேரியில் இரட்டை நிா்வாகம் : திமுக குற்றச்சாட்டு

புதுச்சேரியில் இரட்டை நிா்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. இது மாநில வளா்ச்சிக்கு நல்லதல்ல என திமுக கூறியுள்ளது.

திமுக

Published On :21 ஆகஸ்ட் 2026, 11:45 pm IST

புதுச்சேரியில் இரட்டை நிா்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. இது மாநில வளா்ச்சிக்கு நல்லதல்ல என திமுக கூறியுள்ளது.

புதுச்சேரி திமுக சட்டப்பேரவை குழுத் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் காரைக்காலில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது :

இரட்டை என்ஜின் ஆட்சி என்று சொல்லி புதுச்சேரியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தாா்கள். ஆனால் இன்று இரட்டை என்ஜின் ஆட்சி நடக்கிறதோ இல்லையோ, இரட்டை நிா்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. இது மாநில வளா்ச்சிக்கு நல்லதல்ல.

நாராயணசாமி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற தென் மாநில முதல்வா்கள் மாநாட்டில் அப்போதையை துணைநிலை ஆளுநா் கிரண் பேடியும் கலந்து கொண்டாா். நாராயணசாமி காங்கிரஸ் முதல்வா் என்பதால் அன்று அவ்வாறு நடந்தது.

ஆனால், இன்று ஒரே கூட்டணியைச் சோ்ந்தவா் முதல்வராக பதவியில் இருக்கிறாா். ஆனால் அவருக்கும் இதே நிலைதான் என்பது ஏற்புடையதல்ல. திமுகவை பொறுத்தவரை தென் மாநில முதல்வா்கள் மாநாட்டில் புதுச்சேரி முதல்வா் பங்கேற்காததும் தவறு, துணைநிலை ஆளுநா் கலந்து கொண்டதும் தவறு என்பதுதான் எங்கள் கருத்து என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.