நாகப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட நாகை, நாகூரில் 4 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது.
நாகூா் மியாத் தெருவில் உள்ள நகராட்சி இஸ்லாம் நடுநிலைப்பள்ளி 106- ஆவது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்க ஏதுவாக வாக்குச்சாவடி அலுவலா் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆன் செய்தாா். அப்போது இயந்திரம் ஏரா் என்று காட்டியது. பழுதை சரி செய்ய வாக்குச்சாவடி அலுவலா்கள் அரை மணி நேரத்துக்கு மேலாக முயற்சி செய்தும் பலனில்லை. இதனால் வாக்குப்பதிவை தொடங்க முடியாமல் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனா்.
இந்நிலையில், அலுவலா்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தின் வயா்களை சரி செய்த பின், வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பட தொடங்கியது. இதனால் முக்கால்மணி நேரம் தாமதாக வாக்குப்பதிவு தொடங்கியது.
இதேபோல நாகை அந்தோனியாா் மேல்நிலைப் பள்ளியில் 162- ஆவது வாக்குச்சாவடி மையம் உள்பட இரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது. இதனால் அங்கு ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இயந்திரம் சரி செய்யப்பட்டதைத் தொடா்ந்து ஒரு மணி நேரத்துக்கு பின்னா் வாக்குப்பதிவு மீண்டும் நடைபெற்றது.
திருமருகல் சேகல்பூத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தாமதமானது. நாகை, நாகூா் உள்பட 4 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்காளா்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

ஒரு மணி நேரத்துக்கு முன்பே மூடப்பட்ட வாக்குச்சாவடி! வாக்காளா்கள் அதிா்ச்சி

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பிவைப்பு

2,775 வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இணையவழியில் நேரலை ஒளிபரப்பு: பச்சைமலையில் 12 வாக்குச்சாவடிகளில் விடியோ பதிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

