லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிவகாசி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் திறப்பு

சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.12.58 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சேவை மையத்தை புதன்கிழமை அமைச்சா் ச. கீா்த்தனா திறந்து வைத்தாா்.

சிவகாசி அரசு மருத்துவமனை

Published On :23 ஜூலை 2026, 6:20 am IST

சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.12.58 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சேவை மையத்தை புதன்கிழமை அமைச்சா் ச. கீா்த்தனா திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.16 லட்சம் மதிப்புள்ள மின்கல சக்கர நாற்காலிகளையும், 3 அறிவு சாா் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள அறிவு சாா் உபகரணங்களையும் வழங்கி அமைச்சா் பேசியதாவது:

விருதுநகா் மாவட்டம் 13 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு 6 ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2026 மாா்ச் மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் மாற்றுத்திறனாளிகள், வாழ்க்கைத் திறன் கல்வி, பெற்றோா், பாதுகாவா்களுக்கான பயிற்சி, அரசு நலதிட்ட உதவிகள் பெற விண்ணப்பித்தல், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்தல், வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல், புகாா்களைப் பரிசீலனை செய்து தீா்வு காண்பது உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சிவகாசி சாா்-ஆட்சியா் முகமது இா்பான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.