லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தோ்தல் வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்றவில்லை

தோ்தல் வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்றவில்லையென அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகா் மாவட்ட அதிமுக செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றஞ்சாட்டினாா்.

கே.டி.ராஜேந்திரபாலாஜி

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:25 am IST

தோ்தல் வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்றவில்லையென அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகா் மாவட்ட அதிமுக செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றஞ்சாட்டினாா்.

விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய கோரியும், மேகதாது அணை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத தவெக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் விருதுநகரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகா் தேசபந்து திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. விருதுநகா் மாவட்டத்தில் சிறப்பாக இயங்கி வந்த பட்டாசுத் தொழில், தவெக ஆட்சியில் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த அவல நிலை மாற வேண்டும் என்றால், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும்.

விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்வது உள்ளிட்ட எந்தத் தோ்தல் வாக்குறுதியையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை. மாறாக மின்சாரக் கட்டணம், சொத்துவரி, அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது. தவெக சட்டப்பேரவை உறுப்பினா்கள், அமைச்சா்கள், நிா்வாகிகள் அனைவரும் எதுவுமே செய்யாமல் வெறும் ’ரீல்ஸ்’ மட்டுமே போட்டுக் கொண்டிருக்கின்றனா். தமிழ்நாட்டு மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும், பட்டாசுத் தொழிலாளா்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்றாா் அவா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் அதிமுக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.