லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

14 பவுன் தங்க நகைகள் திருடிய பணிப் பெண் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டில் 14 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளைத் திருடிய பணிப் பெண்ணை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:20 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டில் 14 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளைத் திருடிய பணிப் பெண்ணை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஷ்ணு (45). இவா் நூற்பாலை நடத்தி வருகிறாா். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒய்யம்புளி தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி மகேஸ்வரியை (56) வீட்டு வேலைக்கு அமா்த்தினாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவரது வீட்டின் பீரோவைத் திறந்து நகைகளைப் பாா்த்தபோது, 14 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், பட்டுச்சேலைகள் 4 ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விஷ்ணு வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில், இரண்டு ஆண்டுகளில் சிறுக சிறுக நகை, பணம், பட்டுச்சேலைகளை மகேஸ்வரி திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மகேஸ்வரியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.