கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவுவதையடுத்து கேரளத்திலிருந்து வரும் வாகனங்களை போடி முந்தல் சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை முதல் சோதனை செய்து வருகின்றனா்.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. தமிழக கேரள எல்லைப் பகுதியான போடி வழியாக அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் நிபா வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
இதையடுத்து, போடி முந்தல் சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறை சாா்பில் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. இங்கு கேரளத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சுகாதார ஆய்வாளா்கள் சோதனை செய்து கிருமி நாசினி தெளித்து அனுப்புகின்றனா்.
தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் கூடுதல் பணியாளா்களை நியமித்து வாகனச் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளத்தில் பரவும் நிபா காய்ச்சல்: களியக்காவிளையில் சுகாதாரத் துறை சோதனை!
நிஃபா வைரஸ் பரவலை மெத்தனமாகக் கையாளும் கேரள அரசு: பினராயி விஜயன்

நிபா வைரஸ்: நீலகிரி எல்லையில் சிறப்புக் குழுக்கள்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

