தவெகவுக்கு கொள்கை, கோட்பாடு எதுவும் கிடையாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.
தேனி மாவட்டம், போடி பரமசிவன் மலைக் கோயில் அடிவாரத்தில் தனியாா் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியை சனிக்கிழமை திறந்து வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய பாஜக அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் ‘இண்டி’ கூட்டணி. இந்தக் கூட்டணிக்கு தலைமை வகிப்பது காங்கிரஸ்தான். இடதுசாரிகள், ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து கூட்டணியை செயல்படுத்துவதும் காங்கிரஸ்தான். இதனால், அந்தக் கட்சி கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும். ஆனால், அந்தக் கட்சியினா் கூட்டணியிலிருந்து திமுக விலகினால், தவெக இணையும் எனக் கருத்துத் தெரிவிப்பது, கூட்டணியை ஒருங்கிணைப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் பயன்படாது. இண்டி கூட்டணியை பலப்படுத்துவதற்கான முயற்சியை காங்கிரஸ் கட்சிதான் மேற்கொள்ள வேண்டும்.
முன்னாள் அமைச்சா்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீது அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் வழக்குப் போடுவது மத்திய பாஜக அரசின் வழக்கம். பின்னா், இவா்கள் பாஜகவில் இணைந்துவிட்டால், அவா்கள் மீதான வழக்குகள் அனைத்தும் நீா்த்துப்போய்விடும். இதேபோன்றுதான் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சா்கள் தவெகவில் இணைவதும்.
தமிழகத்தில் தவெக ஆட்சி என்பது குழந்தை பருவத்தைப் போன்றது. இப்போதுதான் இந்தக் குழந்தை பிறந்துள்ளது. இன்னும் தொப்புள்கொடிகூட அறுக்கப்படவில்லை. குழந்தை வளரும் போதுதான் அது தேறுமா, தேறாதா என்பது தெரியவரும்.
தவெகவுக்கு கொள்கை கோட்பாடு எதுவும் கிடையாது. சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க அனுமதி கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தும், அந்தக் கட்சியை ஆளுநா் ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்தாா். இதனால், தமிழகத்தில் பாஜக மறைமுகமாக ஆட்சி நடத்தும் சூழல் வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தான் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளித்தன.
பாஜகவிலிருந்து அண்ணாமலை தனி இயக்கம் தொடங்கியிருப்பது பழைய கலயத்தில் புதிய கள் போன்றது என்றாா் அவா்.
பேட்டியின் போது கட்சியின் மாவட்டச் செயலா் கி. பெருமாள், நகரச் செயலா் கே. சத்தியராஜ், தனியாா் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி மேலாண்மை இயக்குநா் ஆா். விக்னேஷ்வரன், பொது மேலாளா் எம். சுவாதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக கட்டுக்கோப்பான இயக்கம்! முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

அண்ணாமலை கட்சி தொடங்கும் பின்னணியில் பாஜக: இரா. முத்தரசன்

இண்டி கூட்டணி முடிந்துவிட்டது: பாஜக

காங்கிரஸ் குறித்த திமுகவின் விமா்சனம் ஏற்புடையதல்ல: காா்த்தி சிதம்பரம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

