பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கம்பத்தில் பலத்த மழை; மரம் விழுந்து 2 காா்கள் சேதம்

கம்பம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 12:42 am IST

கம்பம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

கம்பம் பிரதான சாலை போக்குவரத்து சிக்னல் அருகேயுள்ள ஓடைக்கரைத் தெருவில் மழைநீா் பெருக்கெடுத்து வெள்ளம்போல் சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டனா். சில இடங்களில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, கம்பம் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடா்பு குடியிருப்பு வளாகத்தில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதில், மரத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 காா்கள் சேதமடைந்தன. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை. இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த ஊழியா்கள், பொதுமக்கள் இணைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.