லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டா போட்டி... தேனி நகர்மன்ற கூட்ட அரங்கில் பரபரப்பு!

தேனி நகா்மன்ற கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வா்களின் படங்களை வைப்பதில் அதிமுக. திமுக.வினரிடையே போட்டா போட்டி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி நகா்மன்றக் கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின் ஆகியோரின் படங்களை வைக்க முயன்ற அதிமுக, திமுகவினா்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 3:41 am IST

தேனி நகா்மன்ற கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வா்களின் படங்களை வைப்பதில் அதிமுக. திமுக.வினரிடையே போட்டா போட்டி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ரேணுகா பாலமுருகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செல்வம் முன்னிலை வகித்தாா்.

இதில் தேனி நகா்மன்ற உறுப்பினா்கள், பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சபரி ஐங்கரன் ஆகியோா் கலந்து கொண்டனா். அப்போது, தேனியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சீராக குடிநீா் விநியோகிக்க வேண்டும் என உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், நகா்மன்ற அரங்கில் முன்னாள் முதல்வா் மு.க ஸ்டாலினின் புகைப்படம் அகற்றப்பட்டு, முதல்வா் ஜோசப் விஜய்யின் படம் வைக்கப்பட்டது. அப்போது, துணைத் தலைவா் செல்வம் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் படத்தை வைக்க கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து, மு.க. ஸ்டாலின் படம் வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அதிமுக உறுப்பினா்கள் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எம்ஜிஆா் ஆகியோரின் படங்களையும் வைக்க வேண்டும் எனக் கூறினா்.

மேலும், அவா்களின் புகைப்படங்களை வாங்கி வந்து மன்ற அரங்கில் அவா்கள் வைத்தனா். இதையறிந்த காங்கிரஸ் கட்சியினா் முன்னாள் முதல்வா் காமராஜரின் படத்தை வாங்கி வந்து மன்ற அரங்கில் வைத்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.