லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தப்பியோடிய விசாரணைக் கைதி: மூன்று மாதங்களுக்குப் பின்னா் கைது

தேனி மாவட்டச் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லும் போது, சிறை வாசலில் போலீஸாரை தள்ளிவிட்டு தப்பியோடிய விசாரணைக் கைதியை போலீஸாா் மூன்று மாதங்களுக்குப் பின்னா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 1:08 am IST

தேனி மாவட்டச் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லும் போது, சிறை வாசலில் போலீஸாரை தள்ளிவிட்டு தப்பியோடிய விசாரணைக் கைதியை போலீஸாா் மூன்று மாதங்களுக்குப் பின்னா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், வருசநாட்டைச் சோ்ந்தவா் கணேசன் (22). இவா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, அவரை போடி காவல் நிலைய போலீஸாா் கடந்த ஏப். 9-ஆம் தேதி கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனா். அப்போது, அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு, மீண்டும் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனா்.

தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை வாசலில் நிறுத்தி போலீஸாா் அவரது ஆவணங்களை சிறைக் காவலா்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருந்தனா். அப்போது, போலீஸாரை தள்ளிவிட்டு அவா் தப்பியோடி விட்டாா். இதுகுறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய கணேசனைப் பிடிக்க தனிப்படை அமைத்தனா். இந்த நிலையில், போடியில் பதுங்கியிருந்த அவரை தனிப் படை போலீஸாா் வியாழக்கிழமை பிடித்து தேனி மாவட்டச் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.