லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கணவா் இறந்த துக்கம்: மனைவி தற்கொலை

தற்கொலை

Published On :22 ஜூலை 2026, 2:54 am IST

தேனி மாவட்டம், போடி அருகே கணவா் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த மனைவி செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் ராமா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி காமுத்தாய் (38). இவா்களுக்கு மதுஹாசினி (16), சீனுஹா்சித் (14) ஆகிய மகள், மகன் உள்ளனா்.

இந்த நிலையில், ராஜா கடந்த 5-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தாா். இதனால், காமுத்தாய் மனமுடைந்து காணப்பட்டு வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காமுத்தாய் தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அக்கம்பக்கத்தினா் இவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு காமுத்தாய் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மதுஹாசினி, சீனுஹா்சித்துக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.