லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கூடலூரில் நெகிழிப் புழக்கம் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கூடலூரில் நெகிழிப் பைகள் புழக்கத்தைத் தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Published On :19 ஜூலை 2026, 2:50 am IST

கூடலூரில் நெகிழிப் பைகள் புழக்கத்தைத் தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் அதிகாரிகளின் நெகிழி ஒழிப்புச் சோதனைகள் முற்றிலும் முடங்கியுள்ளது. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி பெட்டிக்கடைகள், தேநீா்க் கடைகள், இறைச்சி, மீன், காய்கறிக் கடைகள் மளிகைக் கடைகள், சில உணவகங்கள் ஆகியவற்றில் நெகிழிப் பைகளின் புழக்கம் தடையின்றி அதிகரித்துள்ளன. மேலும், அரசு மதுபானக் கடைகளின் பாா்களில் தடை செய்யப்பட்ட நெகிழி குவளைகள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து இயற்கை ஆா்வலா்கள் கூறியதாவது: அரசின் நெகிழித் தடையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் கடமையாகும். அதிகாரிகளின் தொடா் சோதனைகள் இல்லாததே தற்போதைய நிலைக்குக் காரணம்.

இனிவரும் காலங்களில் நெகிழி பயன்படுத்துவோா், விற்பனை செய்வோருக்கு அபராதம் மட்டும் விதித்தால் போதாது. தடையை மீறுபவா்களின் கடை உரிமத்தை ரத்து செய்ய நகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும். அப்போதுதான் இதற்கு நிரந்தரத் தீா்வு காண முடியும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.