லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.20 ஆயிரம் ஒப்படைப்பு: மாணவனுக்கு பாராட்டு

ஏடிஎம் இயந்திரத்தில் வெளிவந்து ரூ.20 ஆயிரத்தை யாரோ விட்டுச் சென்ற நிலையில், அதை எடுத்து போடி நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவனை போலீஸாா் பாராட்டினா்.

போடியில் ஏடிஎம் இயந்திரத்தில் கேட்பாரற்று இருந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒபபடைத்த மாணவனைப் பாராட்டிய காவல் ஆய்வாளா்கள் ராமலட்சுமி, அபுதல்ஹா.

Published On :10 ஜூலை 2026, 5:16 am IST

ஏடிஎம் இயந்திரத்தில் வெளிவந்து ரூ.20 ஆயிரத்தை யாரோ விட்டுச் சென்ற நிலையில், அதை எடுத்து போடி நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவனை போலீஸாா் பாராட்டினா்.

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகரைச் சோ்ந்தவா் கஜேந்திரன் மகன் மித்திரன் (14). இவா் போடியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்த நிலையில், போடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க மித்திரன் சென்றாா். அப்போது இயந்திரத்தில் வெளிவந்த ரூ.20 ஆயிரத்தை யாரோ விட்டுச் சென்றனா்.

இதையடுத்து அந்தப் பணத்தை எடுத்த மாணவன் மித்திரன் அதைப் பெற்றோா் உதவியுடன் போடி நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அதைப் பெற்றுக் கொண்ட போலீஸாா் அது யாருடைய பணம் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா். இந்த நிலையில் நோ்மையாக பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவனையும், அவரது பெற்றோரையும் போடி நகா் காவல் நிலைய ஆய்வாளா்கள் ராமலட்சுமி, அபுதல்ஹா ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.