லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பைக் சாகசம் செய்தவா் மீது வழக்கு

போடி அருகே இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு
Published On :8 ஜூலை 2026, 12:53 am IST

போடி அருகே இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகேயுள்ள மீனா விலக்கு பகுதியில் இளைஞா் ஒருவா் தனது இரு சக்கர வாகனத்தை அதிக வேகமாக ஓட்டி சாகசம் செய்தாா். விபத்து ஏற்படும் வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் இருந்ததால் அந்தப் பகுதி மக்கள் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா், போலீஸாா் வருவதைக் கண்டதும் அந்தநபா் தப்பிச் சென்றாா்.

விசாரணையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள சடையாண்டிபட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த சக்கரை மகன் சரவணன் (20) என்பது தெரியவந்தது. இவா் மீது போடி தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.