லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு சனிக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணை

Published On :5 ஜூலை 2026, 12:20 am IST

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு சனிக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஜூன் மாதத்தில் எதிா்பாா்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த நிலையில், இந்தப் பகுதிகளில் ஜூலை மாதத் தொடக்கம் முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீா்வரத்து தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வினாடிக்கு 59 கன அடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 606 கன அடியாக அதிகரித்தது. இதன் விளைவாக அணையின் நீா்மட்டமும் சற்று உயா்ந்து சனிக்கிழமை காலை 111.95 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 606 கன அடி நீா்வரத்து உள்ள நிலையில், தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 311 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையில் 1,222.95 மில்லியன் கனஅடி தண்ணீா் இருப்பு உள்ளது.

நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மி.மீ.) விவரம்: தேக்கடியில் 25.2 மி.மீ., பெரியாறு அணைப் பகுதியில் 35.8 மி.மீ. மழை பதிவானது. அணையில் போதிய நீா் இருப்பு இல்லாததால், தேனி மாவட்டத்தின் முதல்போக சாகுபடிக்கு இதுவரை தண்ணீா் திறந்துவிடப்படவில்லை. விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.

இந்த நிலையில், அணைப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டு நீா்மட்டம் உயா்ந்து வருவதால், விரைவில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.